தூய்மையான திருப்பூர் மாநகரம்: மேயர் தினேஷ்குமார் உறுதி

திருப்பூர் மாநகரை, குப்பையின்றி தூய்மையான நகராக்க, திட்டங்கள் வகுக்கப்படும் என்று, மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Update: 2022-03-22 02:30 GMT

மேயர் தினேஷ்குமார்.

திருப்பூர் மாநகரட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களின் அடிப்படை வசதிகளையும், புதிய வளர்ச்சி திட்டங்களையும், தொலைநோக்கு பார்வையுடன் வெளிப்படை தன்மையோடு நிர்வாகத்தை வழங்கப்படும்; தூய்மையான நகரமாக திருப்பூர் கட்டமைக்கப்படும் என்று, தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

வார்டு கவுன்சிலர்கள், தங்கள் பகுதி பிரச்சினைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். அப்போது, காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:

திருப்பூரில், 4-வது குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இது, 4 அல்லது 5 மாதங்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடு செய்யப்படும். ஒருங்கிணைந்து செயல்பட்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை சுணக்கம் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக, குப்பையில்லாத மாநகராட்சியாக உருவாக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தில் வெளிப்படைத்தன்மையை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும். கோடை காலமாக இருப்பதால் குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News