தொழில்துறை மின்நுகா்வோா் போராட்டத்துக்கு இந்து முன்னணி ஆதரவு
Tirupur News- திருப்பூரில் தொழில்துறை மின்நுகா்வோா் போராட்டத்துக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தொழில்துறை மின்நுகா்வோா் போராட்டத்துக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் மனித சங்கிலி போராட்டத்துக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டணம் 430 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் பீக்ஹவா் என அறிவித்து அந்த நேரத்தில் இயக்கினால் கூடுதலாக 15 சதவீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என அமல்படுத்தியுள்ளதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயா்வால் பலா் நஷ்டத்தை சந்தித்து தொழிலைவிட்டு வெளியேறியுள்ளனா்.
இந்நிலையில், தொழில்துறையைக் காக்க வேண்டி 400-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பை ஏற்படுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதிகபட்ச மின் கட்டண சுமையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் டிசம்பா் 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொழில் துறையினரின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு இந்து முன்னணி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.