திருப்பூர் மாநகராட்சி மேயருடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமாரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.;
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மேயராக, தினேஷ்குமார் பதவியேற்றார். அவரை, பல்வேறு தரப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், தங்களது தரப்பில் சில வேண்டுகோள்களை அவரிடம் அளித்தனர். திருப்பூர்-கோவை மாவட்ட பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளும், மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. விஜயகுமாரும், மேயர் தினேஷ் குமாரை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.