கடந்த நிதியாண்டில் தமிழக அளவில் ஏற்றுமதி; மூன்றாமிடம் வென்ற திருப்பூர்
Tirupur News,Tirupur News Today- கடந்த நிதியாண்டில் நடந்த ஏற்றுமதியில், தமிழக அளவில் திருப்பூர் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது. இந்நிலையில் கடந்த நிதியாண்டுக்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அளவிலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.
பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்தி பின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி, டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி, உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்னலாடைகள் -ரூ. 806 கோடி ,பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி, பருத்தி நூலிழையிலான இதர பின்னலாடைகள் - ரூ.705 கோடி, செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்னலாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டிவேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.