திருப்பூர் காதர்பேட்டையில் டீ-சர்ட் விற்பனை அதிகரிப்பு - புத்தாடைகள் எடுக்கவும் மக்கள் ஆர்வம்

Tirupur News- திருப்பூர் காதர்பேட்டையில் டீ சர்ட் விற்பனை அதிகரித்து வருகிறது. ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் எடுக்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-10-31 16:21 GMT

Tirupur News- திருப்பூரில் டீசர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அன்றாட பயன்பாட்டில் பின்னலாடைகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், விளையாட்டு ஆடைகள், வாக்கிங் மற்றும் ஜிம் செல்லும்போது அணியும் ஆக்டிவ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் என பல்வகை ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியையொட்டி பின்னலாடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரில் சூடுபிடித்துள்ளது. டீ-சர்ட், இரவு நேர ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

மேலும் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஒரு மாதமாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடை கொள்முதல் செய்து முடித்து விட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தீபாவளிக்கு முந்தைய 10 நாட்கள் ஆடை விற்பனை களைகட்டும். அதற்காக கடந்த சில நாட்களாக திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் விழாக்கால விற்பனைக்கான கொள்முதலும், ஆர்டர் விசாரணையும் பரபரப்பாக நடந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும். அதற்காக குறு, சிறு வியாபாரிகள், புதிய ஆடைகளை, உள்ளாடைகளை கொள்முதல் செய்ய காதர்பேட்டை மொத்த விற்பனை கடைகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் ஆடைகள் வாங்க வருகின்றனர். இதனால் திருப்பூர் காதர்பேட்டை பகுதிகளில் கட்டத் தொடங்கி உள்ளது.

திருப்பூரில் டீ சர்ட் விற்பனை களை கட்டியதை போல, ஜவுளிக்கடைகளிலும் இப்போதே மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கி விட்டது. குறிப்பாக ஞாயிறு தினங்களில், தொழிலாளர்கள் கூட்டம் அதிகளவில் புது ஆடைகளை வாங்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் அதிகளவில், நகர பகுதிக்குள் மக்கள் வருவதால் வழக்கத்தை விட விடுமுறை தினமான ஞாயிறு அன்றும், மாநகர பகுதிக்குள் கூட்டம், நெரிசல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதனால், வாகனங்கள் தேங்கி பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் அடிக்கடி நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News