திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் : பொதுமக்களே கவனம் தேவை!

திருப்பூர் நகரில், ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டது.

Update: 2021-11-17 14:00 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

திருப்பூர், வேலம்பாளையம் அருகே, சோளிபாளையம் கேஆர்சி கீர்த்தனா நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 44 வயது நபருக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்துள்ளது.

தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், கோவையில் உள்ள  தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர்  அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நபரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் பகுதியில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது, பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கவனமுடன், உரிய பாதுகாப்பு வழிமுறை பின்பற்றி  இருக்க, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News