திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
Tirupur News- நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் வேலைவாய்ப்புடன் இலவச தொழிற்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி தொடக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்க மத்திய மற்றும் மாநில அரசின் திறன் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூரில் பின்னலாடைத் துறையினா் இணைந்து செயல்படுத்தி வரும் நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு இத்திட்டத்தின் மூலம் தொழிலாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது இப்பயிற்சி மையத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் உதவி பேஷன் டிசைனா் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தவா்களும் சேரலாம். 18 வயதில் இருந்து 35 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். தங்குமிடம், உணவு, பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். 4 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். திறன் பயிற்சியுடன் கூடுதலாக தையல் கலை பயிற்சி, பேட்டா்ன் மேக்கிங் பயிற்சி, கம்ப்யூட்டா் பயிற்சி, ஆங்கில கல்வி பயிற்சி, யோகா, மென்திறன் பயிற்சிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சி முடித்தோருக்கு மாநில அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்குவதால் சமூகத்தில் தொழிலாளா்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. நேரடியாக திறன்மிக்க தொழிலாளா்களாக பணியில் சோ்வதால் தொடக்கத்திலேயே ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன், திருப்பூரில் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோா் இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 80563 23111, 80566 91111என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என நிப்ட் - டீ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.