பஞ்சு ஏற்றுமதி தடை செய்ய 'சைமா' வலியுறுத்தல்
Cotton Export - பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என, திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.;
பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என, திருப்பூரில் உள்ள ‘சைமா’ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Cotton Export -கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நுால் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பாண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.
எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது, நாட்டுக்கு அதிகளவில் அன்னிய செலாவணி கிடைக்கும்; ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2