ரோட்டரி கிளப் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு
ரோட்டரி கிளப் சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் ஹாலில், தேசிய நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் ரோட்டரி மாவட்டம்-3203ன் திருமுருகன் பூண்டி ரோட்டரி கிளப், அவினாசி கிழக்கு ரோட்டரி கிளப், நிட் சிட்டி ரோட்டரி கிளப், ஆனந்தம் ரோட்டரி கிளப் ஆகியன இணைந்து, தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கை, திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் ஹாலில் நடத்தின.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜேந்திரன், 'மாவட்ட நிர்வாகமும் குடிமக்களின் ஒத்துழைப்பும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். ரோட்டரி கிளப்புகளின் சேவைகளை, அவர் வெகுவாக பாராட்டினார். மாவட்ட வழங்கல் அலுவலர் ம. முருகன், நுகர்வோர் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பற்றி பேசினார். எல்.பி.ஜி. கேஸ் விநியோகஸ்தர்கள் சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் முகம்மது ஜாபர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவைகளை பாராட்டி, 14 கேடயங்களை, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் தலைவர் காதர்பாட்சா, துணைத்தலைவர் அவனாசிலிங்கம், பொதுச்செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, சட்ட ஆலோசகர் வக்கீல் சதாசிவம் உட்பட பலருக்கு அதிகாரிகள் கேடயம் வழங்கினார்கள்.
வக்கீல் கவிதா மகளிர் விழிப்பணர்வு பற்றி பேசினார். பொது நலன்கருதிய தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் டி.ஆர்.ஓ விடம் கொடுத்தனர். சங்க செயற்குழு உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினார்.