திருப்பூரில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 300 பேருக்கு பணி வாய்ப்பு

Tirupur News- திருப்பூர் குமரன் கல்லுாரியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Update: 2024-02-18 16:36 GMT

Tirupur News- திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் குமரன் கல்லுாரியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று குமரன் கல்லுாரியில் நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு துவங்கிய முகாம், மாலை, 4:00 வரை நடந்தது.

சப் கலெக்டர் சவுமியா ஆனந்த் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். கோவை வேலைவாயப்பு பயிற்சி மைய உதவி இயக்குனர் சுப்பிரமணி, சிறப்புரையாற்றினார்.

வேலைவாய்ப்பு முகாமில், எழுதபடிக்க தெரிந்தவர்கள் முதல், பிளஸ் 2 படித்தவர்கள், ஐ.டி.ஐ., — டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர் பங்கேற்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது அதன்படி, பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற்றாலும், அரசு பணிக்கான வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்று விளக்கப்பட்டது. இளைஞர், இளம்பெண்கள், தங்களது சுய விபர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்றனர்.

முகாமில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனமும், தங்களுக்கு தேவையான பணியின் விவரமும், அதற்கான கல்வித்தகுதி குறித்து அறிவிப்புகளை வைத்திருந்தன. முகாமில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்; 300 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மேயர் தினேஷ்குமார் பணி நியமன உத்தரவை வழங்கினார்.

முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News