வீரபாண்டி, ஆண்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
Tirupur News- வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (7ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News- வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (7ம் தேதி) மின்விநியோகம் இருக்காது.
வீரபாண்டி துணைமின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம். ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி. கே. டி.மில் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஆண்டிபாளையம் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என, அவர் தெரிவித்துள்ளார்.