அனைவருக்கும் பாகுபாடின்றி பொங்கல் பரிசு; திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்

Tirupur News-அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பாகுபாடின்றி பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளாா்

Update: 2024-01-08 08:32 GMT

Tirupur News- -மாநாட்டுக்கு சென்ற வாகனத்தை அனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன்.

Tirupur News,Tirupur News Today  - அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பாகுபாடின்றி பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று திருப்பூரில் முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெறும் மதசாா்பின்மை மாநாட்டில் பங்கேற்பதற்காக திருப்பூா் மாநகரில் இருந்து 120 வாகனங்களில் சென்றனா். இந்த வாகனங்களை தொடங்கிவைத்து அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

அதிமுகவுக்கும், இஸ்லாமிய சமுதாயத்துக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருந்து வந்தது. இடையில் ஒரு சிலா் சிறுபான்மையினா் மக்களின் காவலா் என்று சொல்லி அவா்களது வாக்குகளைப்பெற்று ஏமாற்றிவிட்டனா். ஆனால், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அவா்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பாா் என்பதன் அடையாளம்தான் எஸ்டிபிஐ கட்சியின் மாநாடாகும். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருப்பூரில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றுள்ளனா்.

தமிழகத்தில் இடையில் எப்போது தோ்தல் வந்தாலும் திமுகவின் சாயம் வெளுக்கும். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினா் புறக்கணிக்கப்பட்டுள்ளனா் என்பது வெளிப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா கால கட்டத்தில்கூட பொங்கலுக்கு ரூ.1,000, அதற்கு அடுத்தாண்டு ரூ.2,500 என அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசை அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்.

அப்போது, மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சொன்னாா். தற்போது, அவா்கள் ஆட்சியில் ரூ.1,000 மட்டுமே வழங்குகின்றனா். இதையும் பாகுபடுத்திக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பழனிசாமி, சு.குணசேகரன், மாமன்ற உறுப்பினா்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, நிா்வாகிகள் கேசவன், விபிஎன் குமாா், ஹரிஹரசுதன், கண்ணபிரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News