திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் அதிரடி சோதனை

Tirupur News- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-01-18 12:00 GMT

Tirupur News- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர்.

Tirupur News,Tirupur News Today- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் வந்து செல்லும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில்  ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. 

குறிப்பாக திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக நகரில் உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ரயில்களில் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி கோவை - சென்னை வழித்தடத்தில், திருப்பூர் முக்கிய தொழில் நகரமாக இருப்பதால் ஏராளமான சரக்குகளும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் மக்கள், அவர்களது உடமைகளை மிக தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

பொங்கல் கொண்டாட்டத்துக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வரத் துவங்கியதால் இரு தினங்களாக ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, ரயில்வே போலீசார் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News