திருப்பூரில் தீபாவளியன்று சிறப்பு காட்சிகள் திரையிட்ட தியேட்டருக்கு நோட்டீஸ்

Tirupur News- திருப்பூரில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் ஒன்றில், தீபாவளியன்று அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிட்டதால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Update: 2023-11-16 10:46 GMT

Tirupur News- திருப்பூரில் அனுமதியின்றி சிறப்பு காட்சி திரையிட்ட தியேட்டருக்கு நோட்டீஸ் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தீபாவளி நாளில் அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிட்ட தியேட்டருக்கு மாட்ட நிா்வாகம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பப்பட்டது.

திருப்பூா் யூனியன் பிரதான சாலையில் மல்ட்டி பிளக்ஸ்  தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் தீபாவளி நாளில் அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிட்டதாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், வடக்கு வட்டாட்சியா் மகேஸ்வரன், வருவாய் அலுவலா் தேவி, கிராம நிா்வாக அலுவலா் விஜயராஜ் ஆகியோா் தியேட்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என கூடுதலாக சிறப்பு காட்சிகள் திரையிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக சிறப்புக் காட்சிகள் திரையிட்டது குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தமிழகத்தை பொருத்தவரை  காலை 9 மணி முதல், இரவு 1.30 மணிக்குள் ்அனைத்து காட்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்களிலும், பெரிய நடிகர்களின் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் இதுபோல் கூடுதலாக சிறப்பு ரசிகர் காட்சிகள் திரையிட்டாலும் இந்த கால வரைமுறைக்குள் கட்டாயம் காட்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும் என, தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள இந்த மல்ட்டி பிளக்ஸ் தியேட்டரில் காலை 9 மணிக்கு முன்னதாக 4 காட்சிகள், சிறப்பு காட்சிகளை திரையிடப்பட்டது தெரிய வந்த நிலையில், புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News