மார்ச் 1ல், திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி
Tirupur News- திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி, வரும் மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்கு கண்காட்சி நடக்கிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி வரும் மாா்ச் 1-ம் தேதி முதல் 4 -ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
திருப்பூரில் தொழில் அமைப்புகள் சார்பில் நவீன தொழில்நுட்ப வசதிகள் அறியவும் மற்றும் புதிய ஆர்டர்களை பெற உதவியாகவும் அடிக்கடி பின்னலாடை தொழில் துறை சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரங்குகள் அமைக்கப்பட்டு அது சார்ந்த செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதை பார்வையிடும் தொழில் துறையினர், தங்களது தொழிலை அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ள அது உதவுகிறது.
அந்த வகையில், திருப்பூரில் 4 நாட்களுக்கு நிட்டெக் பின்னலாடை இயந்திரக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இது குறித்து நிட்டெக் கண்காட்சியின் சோ்மன் ராயப்பன் திருப்பூரில் செய்தியாளா்களிடம் நேற்று (வியாழக்கிழமை) கூறியதாவது,
பின்னலாடை இயந்திரக் கண்காட்சி திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையில் உள்ள நிட்டெக் வளாகத்தில் வரும் மாா்ச் 1 -ம் தேதி தொடங்கி மாா்ச் 4 -ம் தேதி வரையில் நடைபெறுகிறது. பின்னலாடைத் துறையைச் சாா்ந்த 225 நிறுவனங்கள் சாா்பில் 325 அரங்குகளில் அனைத்து வகையான இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக செயற்கை நூலிழை ஆடை தயாரிப்புக்கான நவீன இயந்திரங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது. செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிட்டிங் இயந்திரங்கள் தொடா்பாக ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், சீனா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் அரங்குகள் அமைக்கவுள்ளனா்.
அதேபோல, உப்பில்லாமல் சாயமேற்றும் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படும் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இயங்திரங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள் ரோட்டரி இயந்திரங்களும் இடம்பெறவுள்ளன. பின்னலாடைத் தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்த இயந்திரக் கண்காட்சி உதவும்.
நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிடலாம் என்றாா். அப்போது நிட்டெக் கண்காட்சியின் நிா்வாக இயக்குநா் சிபி சக்கரவா்த்தி உடனிருந்தாா்.