Queen Of The Night Flower-திருப்பூரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி பூ

Queen Of The Night Flower- திருப்பூர், போயம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், நள்ளிரவில் இரு செடிகளிலிருந்து பிரம்ம கமலப் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது.

Update: 2022-08-01 06:05 GMT

திருப்பூரில் நள்ளிரவில் மலர்ந்த நிஷாகந்தி மலர் 

Queen Of The Night Flower- சிவபெருமானுக்கு உகந்த பிரம்ம கமலம் மலர், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நள்ளிரவில் மலரும் தன்மை கொண்டது.இம்மலருக்கு, நிஷாகந்தி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நறுமணம் கமழும் இந்த பூ, ஜூலை முதல் செப்., மாதம் வரையிலான காலகட்டத்தில் மலரும். நள்ளிரவில் மலரத துவங்கும் இந்த பூ, அதிகாலை வரை மலர்ச்சியாக காணப்படும். அதன் பின் முற்றிலும் வாடி விடும்.

திருப்பூர், போயம்பாளையம், கங்கா நகரில் உள்ள ஆண்டவர் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு இரு செடிகளிலிருந்து பிரம்ம கமலப் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது. அவர்கள் அந்த பூவை வணங்கி மரியாதை செலுத்தினர். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பிரம்ம கமலம் பூக்களை, ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News