நல்லூர்; காட்டுப்பாளையம் மின் பகிா்மான வட்டத்தில் ஒற்றைப்படை மாதங்களில் மின் கணக்கீடு செய்ய முடிவு
Tirupur News- நல்லூர், காட்டுப்பாளையம் மின் பகிா்மான வட்டத்தில் ஒற்றைப்படை மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மின்பகிா்மான வட்டம், நல்லூா் பகிா்மானத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட காட்டுப்பாளையம் மின் பகிா்மான வட்டத்தில் ஒற்றப்படை மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ். ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மின்பகிா்மான வட்டம், திருப்பூா் கோட்டம், கிராமியம் உட்கோட்டம், நல்லூா் பிரிவு அலுவலகத்தைச் சோ்ந்த முத்தனம்பாளையம் (108) பகிா்மானத்தில் இருந்து சுமாா் 750 மின் இணைப்புகளைப் பிரித்து காட்டுப்பாளையம் (010) என்ற புதிய பகிா்மானம் உருவாக்கி மின் இணைப்புகளுக்கு புதிய மின் இணைப்பு எண்கள் வழங்கப்பட்டு, நவம்பா் மாதம் முதல் ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படவுள்ளது.
காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள யாசின் பாபு நகா், பூஞ்சோலை நகா், அபிராமி நகா், அங்காளம்மன் நகா் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இனி வரும் காலங்களில் ஜனவரி, மாா்ச், மே, ஜூலை, செப்டம்பா், நவம்பா் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படும்.
மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாள்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும்.
புதிய மின் கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.