திருப்பூரில் நடந்த மருத்துவ முகாமில் ரத்ததானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இதில் கண்பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டது. 46 பேர் ரத்ததானம் வழங்கினர்.;

Update: 2022-07-26 14:32 GMT
திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிபாளையத்தில், மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிபாளையத்தில், நடந்த மருத்துவ முகாமில் ரத்த தானம், இலவசமாக கண் பரிசோதனை மற்றும், ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது.

நண்பர்கள் குழு அறக்கட்டளை, சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாம், வஞ்சிபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தது. இதில், தி ஐ பவுண்டேசன், துளசி பார்மஸி சார்ந்த மருத்துவ குழுவினர், முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் மொத்தம் 200 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. ரத்த தானம் வழங்கிய 46பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Similar News