திருப்பூரில் லோக் அதாலத்; 323 வழக்குகளில் ரூ. 17.71 கோடிக்கு சமரச தீர்வு

Tirupur News,Tirupur News Today-தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவுபடி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட் வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மொத்தம் 7 அமர்வுகளாக நேற்று நடைபெற்றது.

Update: 2023-06-11 10:18 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில், வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Tirupur News,Tirupur News Todayதிருப்பூர்- திருப்பூரில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 323 வழக்குகள் ரூ. 17 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. விபத்தில் இறந்த அரசு டிரைவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர உத்தரவு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் விபத்து வழக்கில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்க சமரச தீர்வு காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 39). இவர் அரசு போக்குவரத்து கழகம் பழனி கிளையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

கடந்த 23-12-2021 அன்று செல்வக்குமார், தனது பைக்கில் உடுமலை-பழனி ரோட்டில் சமத்துவபுரம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதிய விபத்தில் செல்வக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு. -செய்து விசாரணை நடத்தினா். செல்வக்குமாரின் இழப்புக்கு விபத்து இழப்பீடு கேட்டு அவருடைய மனைவி மற்றும் மகன், மகள், தாயார் ஆகியோர் திருப்பூர் மாவட்ட வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேற்று சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. செல்வக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் விபத்து இழப்பீடாக வழங்க சோழ மண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தினருடன் சமரசத் தீர்வு காணப்பட்டது. விபத்து இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கான உத்தரவை செல் வக்குமாரின் குடும்பத்தினரிடம் நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழங்கினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜராகி வாதாடினார்.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1, 625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 323 வழக்குகளுக்கு ரூ. 17 கோடி 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.இதில் 189 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ. 13 கோடி 98 லட்சம் மதிப்பிலும், 39 சிவில் வழக்குகள் ரூ. 31.5கோடி மதிப்பிலும், குடும்ப நல வழக்கு, சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்கள் பழனிகுமார், முருகேசன், வக்கீல் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, ரகுபதி, சபரிகீதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News