திருப்பூரில் தீயணைப்பு அலுவலகத்தில் ரூ. 1.85 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

Tirupur News- திருப்பூா் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Update: 2023-11-08 10:12 GMT

Tirupur News-திருப்பூரில் தீயணைப்பு அலுவலகத்தில், லஞ்சப் பணம் பிடிபட்டது. (மாதிரி படம்) 

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக திருப்பூா் குமாா் நகரில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா், காவல் ஆய்வாளா் கெளசல்யா ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.85 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ. 2.80  லட்சம் கணக்கில் வராத தொகையை போலீசார் பறிமுதல் செய்தது, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தீயணைப்பு துறை அலுவலகத்திலும் இவ்வாறு லஞ்ச பணம் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வட்டார போக்குவரத்து அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இதுபோன்ற லஞ்ச பணப்புழக்கம்  குறித்து போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.   

Tags:    

Similar News