திருப்பூரில், ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனையில் முறைகேடு; ஊழியர்கள் 3 பேர் ‘சஸ்பெண்ட்’

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் ரேஷன் கடையில், முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.;

Update: 2023-05-25 12:31 GMT
திருப்பூரில், ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனையில் முறைகேடு;   ஊழியர்கள்  3 பேர் ‘சஸ்பெண்ட்’

Tirupur News. Tirupur News Today- விற்பனையில் முறைகேடு செய்ததாக, திருப்பூரில் ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். (கோப்பு படம்)

  • whatsapp icon

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவாக விற்பனை உள்ளிட்ட புகார் தொடர்பாக, 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு பொன்முத்துநகர் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடை விற்பனையாளர் இந்திராணி, பொதுமக்களுக்கு துவரம் பருப்பை எடை குறைவாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்த ஒருவர் எடை குறைவாக பருப்பு உள்ளதாகவும், அந்த பருப்பை மீண்டும் எடை போடுமாறு விற்பனையாளரிடம் கூற, அவர் அடுத்த முறை சரி செய்து கொள்வதாக கூறுவதைப்போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் கடை ஊழியர் இந்திராணியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  அதுபோல் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, அரண்மனைப்புதூர் ரேஷன் கடை ஊழியர் சிட்டி பாபு, கே.என்.பி.காலனி ரேஷன் கடை ஊழியர் பிரேமா ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 3 ரேஷன் கடை ஊழியர்கள் மீது, கூட்டுறவுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், சில கடைகளில் இதுபோன்ற நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தி, முறைகேட்டில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது, இதுபோன்ற கடும் நடவடிக்கைகளை தொடர  வேண்டும் என்றும், பொதுமக்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News