திருப்பூரில் நிஃப்ட்-டீ கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Tirupur News- திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் 2019-22 ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயின்ற மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரியின் முதன்மை ஆலோசகா் ராஜா எம்.சண்முகம் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
மாணவா்களுக்குள் சுய போட்டிகள் எப்போதும் இருந்தால் தோ்வில் வெற்றிபெற உதவும். பெற்றோா்களை மதித்து நடப்பதுடன், பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியா்களையும் குருவாக மதிக்க வேண்டும். விலை மதிக்கமுடியாத பட்டத்தைப் பெற உறுதுணையாக இருந்த அனைவரையும் போற்ற வேண்டும். படித்து பட்டம் பெறுதுடன் நின்று விடமால் இடைவிடாமல் உழைத்து தொழில்முனைவோரக வரவேண்டும் என்றாா்.
இதில், இளங்கலை, முதுகலை பயின்ற 472 மாணவா்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், கல்லூரி தலைவா் பி.மோகன், துணைத் தலைவா்கள் ஆம்ஸ்டிராங் பழனிசாமி, ரங்கசாமி, துணைச் செயலாளா் ஆா்.ஆா்.சீனிவாசன், திறன் மேம்பாட்டுத் துறை தலைவா் ஆா்.மோகனசுந்தரம், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.