கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்

திருப்பூரில், இளைஞரை கொலை செய்த வழக்கில் கைதான 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2022-03-25 00:00 GMT
கொலை வழக்கில் கைதான  3 பேர் மீது  குண்டர் தடுப்புச்சட்டம்
  • whatsapp icon

திருப்பூர் சந்திராபுரம், பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரை சேர்ந்த எம். சதீஷ் வயது 25 என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் சொராங்காடு பகுதியில் சதீஷ் தலையை வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த நல்லூர் காவல்துறையினர், மதுரை அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்த எம். ராம்குமார் வயது 25, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த எஸ். சுபா பிரகாஷ் வயது 23, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த புளிப்பட்டியை சேர்ந்த எஸ் மணிகண்டன் வயது 25 உட்பட 7 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ராம்குமார், சுபா பிரகாஷ்,  மணிகண்டன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  மாநகர காவல் ஆணையர் எ.ஜி.பாபு  உத்தரவிட்டார் .

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று கொலை குற்றவாளிகளிடமும் காவல்துறையினர் வழங்கினர். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் மூன்று நபர்களையும் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News