திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில், பனியன் நிறுவனத்தில், தீ விபத்து ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமானது.

Update: 2023-08-28 01:52 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில், பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமானது.

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி வரை வேலை நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் பணிகள் முடிந்து, அனைத்து தொழிலாளர்களும் சம்பளம் பெற்று வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பனியன் நிறுவனத்தில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனே தீயை அணைக்க அங்கிருந்த சில ஊழியர்கள் முயற்சி செய்தனர். ஆனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பனியன் நிறுவனம் முழுவதும் தீ வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, நிறுவனப்பகுதிக்குள் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து, கரும்புகை அதிகளவில் வெளியேறியது. 

இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பனியன் நிறுவனம் 3ஆயிரம் அடிக்கும் மேற்பட்ட சதுர அடியில் இருந்ததால், 20 தண்ணீர் லாரிகளை வரவழைத்து, சுற்றிலும் தண்ணீரை அடித்து, தீயை அணைக்க முயற்சித்தனர்.

தொடர்ந்து, 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News