திருப்பூரில் ஆடை ஏற்றுமதி வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்
Tirupur News- திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன் பூண்டியில் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- ஆடை ஏற்றுமதி வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், ரேப், அமெரிக்கன் அப்பேரல் புட்வியா் மற்றும் ஏஏஐடபிள்யூ ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில் ரேப் நிறுவனத் தலைவா் அபெடிஸ் ஹச். செப்பரியன், ஏஏஐடபிள்யூ தலைவா் நேட் ஹொ்மன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், இளங்கோவன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தணிக்கை காரணங்களால் தொழில் பாதிக்கப்படக் கூடாது. சீனாவை நம்பி தொழில் துறையில் அமெரிக்கா இருக்கக் கூடாது. ஆகவே, அங்கு தேவையான தொழில் வாய்ப்புகள் வியத்நாமுக்கு சென்றாலும், அந்த அளவுக்கு பெரிய உற்பத்தி வசதிகள் அங்கு இல்லை. ஆனால், இந்தியாவில் அதற்கான அத்தனை விஷயங்களும் உள்ளன. சீனா பருத்தி உற்பத்தியில் தொழில் சுரண்டல் உள்ளது.
ஆகவே, இந்தியா தணிக்கை விஷயங்களை முறைப்படுத்தும்போது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வா்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும். தணிக்கை விஷயத்தில் பொதுவான ஒரு தளத்தை உருவாக்கினால், அதன்மூலம் ஏற்றுமதி தொழில் துறையினா் பயன்பெறுவாா்கள். இதனால், ஆடை ஏற்றுமதி அமெரிக்காவுக்கு பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.