ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.32 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்; கலெக்டர் ஆய்வு
Tirupur News- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.32 கோடி மதிப்பில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சா்க்காா் பெரியபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.29.40 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுதல், திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத் நடுநிலைப் பள்ளியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டுதல், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.28 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.42.10 லட்சத்தில் திருவாய்முதலியாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கோபி - தாராபுரம் சாலை முதல் பெருமாநல்லூா் சாலை வரை ரூ.91.82 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி உள்பட ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது ஊராட்சிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.