திருப்பூாில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணி; துவக்கி வைத்த அமைச்சர்கள்
Tirupur News- திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரோட்டரி சங்கம், பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பணியைத் தொடங்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அதிநவீன் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இந்த புற்றுநோய் மருத்துவமனையானது இந்திய அளவில் ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக அமைக்கப்படவுள்ளது.
இந்த மருத்துவமனையில் கதிா்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, ஐம்ஆா்டி, ஐஜிஆா்டி, உள்கதிா்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்றுநோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இந்த மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளித்த திருப்பூா் ரோட்டரி சங்கங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவா் ஆ.முருகநாதன், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முருகேசன், திருப்பூா் மாநகராட்சி 4- வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.