திருப்பூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
Tirupur News- திருப்பூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தாா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையம் திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், திருப்பூா் (வடக்கு) திருப்பூா் (தெற்கு) பல்லடம், காங்கயம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) அபிஷேக் குப்தா, திருப்பூா் கோட்டாட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் ஜி.திவ்யபிரியதா்ஷனி, வி.தா்மராஜ், குமரேசன், உதவி இயக்குநா் (நிலஅளவை) ஹாரிதாஸ், தனி வட்டாட்சியா் தங்கவேலு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கோவை மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த திருப்பூர், கடந்த 2009ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளும், ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளும் திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு புதிய திருப்பூர் மாவட்டம் உருவானது. அதன்படி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், உடுமலை, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகள் திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன.
இதில் உடுமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தும், தாராபுரம், காங்கயம் பகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்கள், திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல், உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்படும் போது வாக்கு எண்ணிக்கை மையமாக, திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரி மையமாக செயல்படுத்தப்படுகிறது.