திருப்பூரில் மரியாலயா இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

Tirupur News-திருப்பூாில் உள்ள மரியாலயா பெண் குழந்தைகள் இல்லத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

Update: 2023-11-09 09:38 GMT

Tirupur News- திருப்பூரில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் உள்ள மரியாலயா பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு தங்கியிருந்தோரிடம் கலெக்டர் பேசியதாவது,

கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அவா்கள் மறுவாழ்வுக்கும் அரசு மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்து கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை இந்த இல்லம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.


இதைத் தொடா்ந்து, அங்கு தங்கியுள்ளவா்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து இனிப்புகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் மையம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டாா்.

மேலும், திருப்பூா் அனுப்பா்பாளையம் புதூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் வழங்கப்படும் உணவு மற்றும் சத்துணவு முட்டையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஸ்டெல்லா, மரியாலயா பெண் குழந்தைகள் இல்லத்தின் செயலாளா் சகாயம், நிா்வாக அலுவலா் சாரதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News