திருப்பூரில் மாற்றம் அமைப்பின் சார்பில் துணிப்பை வழங்கும் நிகழ்வு

திருப்பூரில் மாற்றம் அமைப்பின் சார்பில் துணிப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2022-08-21 14:02 GMT

திருப்பூரில் மாற்றம் அமைப்பின் சார்பில் நெகிழிப்பைகளுக்கு பதிலாக துணிப்பை வழங்கப்பட்டது.

திருப்பூர்  பழைய பேருந்து நிலையம் சந்தை பேட்டை வளாகம் மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்த பொதுமக்கள் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வும் மற்றும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பெற்று கொண்டு துணி பைகளை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு துணி பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகள் பயண்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தி அதை நீர் நிலைகள் ஆறுகள் குளங்கள் மற்றும் நிலங்களில் போடுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மண் வள பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் தங்கவேல்  தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் ஜெகன் ரவிச்சந்திரன், ராஜபாண்டி, திவ்யா, கார்த்திகா, ஹர்சிதா மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் நடத்துவது என அமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News