திருப்பூரில் நாளை பாரத் டெக்ஸ் கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டம்

Tirupur News- டில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டம், திருப்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-12-20 05:30 GMT

Tirupur News- பாரத் டெக்ஸ் கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டம், திருப்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

Tirupur News,Tirupur News Today- டில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டம் திருப்பூரில் வரும் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் முன்னணி தொழில் வல்லுநா்கள், ஜவுளி உற்பத்தியாளா்கள், ஜவுளி விற்பனையாளா்கள், வா்த்தகா்கள், வடிமைப்பாளா்களைக் கொண்டு பாரத் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளிக் கண்காட்சி புதுதில்லியில் வரும் பிப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் அனைத்து ஜவுளி தொடா்பான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூட்டமைப்பால் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 3,500 கண்காட்சியாளா்கள், 40 ஆயிரம் உள்நாட்டு வா்த்தகா்கள், 3 ஆயிரம் வெளிநாட்டு வா்த்தகா்கள் பங்கேற்க உள்ளனா்.

நூல், கம்பளி நூல், துணிகள், தரை விரிப்புகள், பட்டு, ஜவுளி சாா்ந்த கைவினைப் பொருள்கள், கைத்தறி, ரேயான், சணல், கம்பளி ஆடைகள் இதில் இடம்பெறவுள்ளன. ஜவளி மற்றும் ஆடைத் துறையின் பிரச்னைகள், நிலைத்தன்மை குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன. இதைத்தொடா்ந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் ஆகியன சாா்பில் பாரத் கண்காட்சி தொடா்பான விளக்கக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள பப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

எனவே, திருப்பூரில் உள்ள ஜவுளி தொழில்முனைவோா் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் டெக்ஸ் 2024

பாரத் டெக்ஸ் 2024 என்பது 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் உலக மகா ஜவுளி நிகழ்வாகும். இதை 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுடில்லியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது நிலைத்தன்மை, மறுசுழற்சி குறித்த சிறப்பு அரங்குகள், நெகிழ்வான உலகளாவிய விநியோக அமைப்புகள், டிஜிட்டல்மயமாக்கல் குறித்த கருப்பொருள் விவாதங்கள், கைவினைஞர்களின் தயாரிப்பு செயல்விளக்கங்கள், சர்வதேச வடிவமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.

சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தரைத்தளம், இழைகள், நூல், துணிகள், தரைவிரிப்புகள், கம்பளங்கள், பட்டு, ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் பல கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இது சுமார் 50 அமர்வுகளைக் கொண்டிருக்கும்.

தமிழகத்தின் கைத்தறி பிரமாண்டமான ஜவுளி கண்காட்சியில் தமிழகத்தின் புகழ் பாரம்பரியம்,கலாச்சாரத்தை பறை சாற்றும், கைவினைத்திறன், உலகில் உயர்ந்து நிற்கும்.  உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு சான்றாகவும் பாரத் எக்ஸ் 2024  பிரதிபலிக்கும். கைத்தறி மூலம் கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தின் வலிமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது பல்வேறு வகையான ஜவுளிகளை கண்காட்சி தளத்துக்கு கொண்டுவரும் மற்றும் மாநிலத்தின் தொழில்துறையின் வலிமையை வெளிப்படுத்தும் இடமாக அமையும். 

பாரத் டெக்ஸ் விரிவான விளக்க கண்காட்சி கொள்கைகள் பற்றி விவாதங்கள் கேள்வி மற்றும் நிலையில் டெக்ஸ் 2024 காண தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை இந்த தளம் வலியுறுத்தியுள்ளது.

வீட்டு உபயோக ஜவுளி தரை உரைகள் இலைகள் நூல்கள் துணிகள் தரை விரிப்புகள் பட்டு மற்றும் கைத்தடியில் விசைத்தறி பொருட்கள் ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் பல பொருள்களுக்கு பாரத் டெக்ஸ் 2024 ஒரு சரித்திர கண்காட்சியாக அமையும் நிலைத்தன்மை மட்டும் மறுசுழற்சி உலகளாவிய விநியோக சங்கிலிகள் விவாதங்கள் டிஜிட்டல் மயமாக்கல் துணி சோதனை மையங்கள் தயாரிப்பு செயல் விளக்கங்கள் மூன்று தலைமுறைகள் சார்ந்த கைவினை கலைஞர்களால் நடத்தப்படும் கூட்டங்கள், உலகளாவிய பிராண்டுகள் மற்றும் சர்வதேச வடிவமைப்பாளர்கள் தனி நிகழ்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக பாரத டெக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News