நூல் விலை திடீர் உயர்வு; திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

Tirupur News,Tirupur News Today- நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளதால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-08-17 13:12 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நூல் விலையில் திடீர் உயர்வு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பனியன் உற்பத்தி பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. திருப்பூரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த காலங்களில் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததன் காரணமாக பனியன் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது.

திருப்பூர் மாநகரில் தற்போதைய சூழ்நிலையில் 50 சதவீதம் அளவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல் முடங்கியே காணப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் வருகை இல்லை. உள்நாட்டு ஆடை வர்த்தகமும் மந்த கதியிலேயே காணப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு கடந்த 5 மாதமாக நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாத நூல் விலை ரூ.25 வரை குறைந்தது. இதன் காரணமாக புதிய ஆர்டர்கள் எடுத்து செய்யும் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்தனர். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று நூற்பாலை உரிமையாளர்கள் நூல் விலையை அறிவிப்பது வழக்கம். இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலை சங்கம் கடந்த 1- ம்தேதி அறிவித்தது. கடந்த மாத நூல் விலையே தொடருவதாகவும், நூல் விலையில் மாற்றமில்லை என்று தெரிவித்தது. இதனால் பனியன் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. பருத்தி விலை உயர்வால் நூல் விலையை மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய முடியாது என்று ஏற்கனவே தெரிவித்த நிலையில் நூல் விலை உயர்ந்தது பனியன் உற்பத்தியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதன்படி, வரி நீங்கலாக கோம்டு ரக நூல் விலை 16-ம் நம்பர் ரூ.242, 20-ம் நம்பர் ரூ.245, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.278, 40-ம் நம்பர் ரூ.293 ஆக உள்ளது. செமி கோம்டு ரகம், 16-ம் நம்பர் ரூ.232, 20-ம் நம்பர் ரூ.235, 24-ம் நம்பர் ரூ.245, 30-ம் நம்பர் ரூ.255, 34-ம் நம்பர் ரூ.268, 40-ம் நம்பர் ரூ.283 ஆக உள்ளது.

Tags:    

Similar News