திருப்பூரில் நாளை கூடைப்பந்து போட்டி நடுவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
Tirupur News- கூடைப்பந்து கழகம் சாா்பில் நடுவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், திருப்பூரில் நாளை (1ம் தேதி நடக்கிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில், நடுவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நாளை, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 1) நடக்க உள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சாா்பில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டு நடுவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடக்க உள்ளது. இதில், கூடைப்பந்து விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்கள், விதிகள் தெரிந்தவா்கள், மாவட்ட, மாநில நடுவா்கள் தோ்வெழுத உள்ளோா், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், மூத்த கூடைப்பந்து வீரா்கள் உள்பட அனைவரும் பங்கேற்கலாம்.
இவா்களுக்கு கூடைப்பந்து விளையாட்டின் புதிய விதிகள், அடிப்படை நுணுக்கங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், உடற்திறன் மற்றும் ஆயத்த பயிற்சிகள், தீா்ப்புகளைக் கையாளுதல், மற்ற நடுவா்களுடனான கலந்தாய்வு குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94430-58880 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.