திருப்பூரில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது
Local Train News Today- திருப்பூரில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருப்பூரில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது.
Local Train News Today- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வடமாநிலத்தில் இருந்து கோதுமை மூட்டைகளுடன் சரக்கு ரயில் வந்தது. குட்ஷெட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதன்பின்பு ரயில், ஈரோடு நோக்கி புறப்பட தயாரானது. நள்ளிரவு ஒரு மணியளவில் சரக்கு ரயில் என்ஜினை மட்டும் தனியாக டிரைவர் இயக்கினார். அப்போது திடீரென ரயில் என்ஜின் சக்கரங்கள் தடம் புரண்டன. இதை கவனித்து டிரைவர் உடனடியாக என்ஜினினை நிறுத்தினார். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து மீட்பு ரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டு தடம் புரண்ட என்ஜினை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அதிகாலை 3 மணிக்கு இந்த பணி நிறைவடைந்தது. அதன்பின் 4 மணிக்கு சரக்கு ரயில் அங்கிருந்து ஈரோடு புறப்பட்டது. குட்ஷெட் பகுதியில் தனியாக உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கோவை, ஈரோடு மார்க்கமாக செல்லும் பயணிகள் ரயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2