திருப்பூரில் ஓடும் பஸ்சில் 17 பவுன் நகை ‘அபேஸ்’ - மர்ம நபர்கள் கைவரிசை

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இருந்து சென்ற பஸ்சில் பயணித்த, பெண் வைத்திருந்த பேக்கில் இருந்த 17 பவுன் நகை திருடுபோனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2023-06-25 12:10 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் பஸ்சில், 17 பவுன் நகைகள் திருட்டு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், பாளையக்காடு பகுதியை அடுத்துள்ள பவானிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜீவிதா. இருவரும் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று இரவு திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில் வழிக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறினர்.

அப்போது பஸ்சில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தாராபுரம் ரோடு அருகே பஸ் சென்ற  போது ஜீவிதா தனது கையில் இருந்த பேக்கில், டிக்கெட் எடுப்பதற்காக  பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பேக்கின் ஜிப் திறந்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேக்கின் உள்ளே பார்த்த போது, அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகளை காணவில்லை. நகைகளை  காணாமல் அதிர்ச்சியடைந்த ஜீவிதா, உடனே கூச்சலிட்டார்.  உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் வைத்திருந்த பைகள் மற்றும் பொருட்களில் நகைகள் மறைக்கப்பட்டு இருக்கிறதா என, பார்க்கப்பட்டது.

ஆனால் நகைகளை திருடிய மர்மநபர்கள் நைசாக, பஸ்சில் இருந்து உடனடியாக இறங்கி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஜீவிதா புகார் அளித்தார். பஸ்சில் நகைகள் போனது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேக்கில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் திருடு போயிருப்பதால், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், பெண் வைத்திருந்த பேக்கில் இருந்த நகைகளை திருடி, தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News