திருப்பூர் தொழில் அமைப்பினர் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்

பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தகோரி, அனைத்து தொழில் அமைப்பினர் சார்பில், திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Update: 2021-11-26 02:00 GMT

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி மற்றும் அது தொடர்புடைய லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்திக்கு பிரதான தேவையான நூல் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த நவம்பர் 1ம் தேதி ஒரேநாளில் கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்தது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல்களின் விலையும் கிலோவுக்கு 120 ரூபாய் வரை உயர்ந்தது, பின்னலாடை நிறுவனங்களை கவலை அடையச் செய்தன.

இந்நிலையில், நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் தொழில்துறையினர் சார்பில்,  இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை நிறுவனங்கள் இன்று இயங்காமல் மூடப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள டீமா, சைமா உள்ளிட்ட தொழில் அமைப்புகள், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதுதவிர, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், இன்று காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News