சீர்மிகு திட்டத்தில் பல்வேறு பணிகள் ஒரு நபர் விசாரணை குழு அதிகாரி ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தில் பல்வேறு பணிகள் ஒரு நபர் விசாரணைக் குழு செய்தது

Update: 2022-04-28 09:15 GMT

திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தில் பல்வேறு பணிகள் ஒரு நபர் விசாரணை குழு அதிகாரி ஆய்வு செய்தார்    

திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தில் பல்வேறு பணிகள் ஒரு நபர் விசாரணை குழு அதிகாரி ஆய்வு.                 .

திருநெல்வேலி மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Smart City) ரூ.965 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள், அவை செயல்படுத்திய விதம் மற்றும் இப்பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட ஒரு நபர் விசாரணைக் குழு ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான  டேவிதார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 27.04.2022 மற்றும் 28.04.2022 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பேரூந்து நிலையம் அபிவிருத்திப் பணிகள், அறிவியல் பூங்கா அமைத்தல், பாளை பேரூந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், வணிக மையம் மேம்படுத்துதல், சாலைக்குறியீடு அமைத்தல், வ.உ.சி. மைதானம் மேம்படுத்தும் பணிகள் மற்றும் நேரு சிறுவர் கலையரங்கம் மேம்படுத்துல்.

ஜங்ஷன் பெரியார் பேரூந்து நிலையம் மேம்படுத்துதல், த.மு.சாலையில் இரு சக்கர வாகன காப்பகம் அமைத்தல் மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வண்ணார்பேட்டை பகுதியில் சலவை நிலையம் அமைத்தல், ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம், இராமையன்பட்டி உரக்கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தும் பணிகள், இராமையன்பட்டி உரக்கிடங்கு பகுதியில் 2 மற்றும் 3 மெ.வாட் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுண் உரக்கிடங்கு அமைத்தல், நயினார்குளம் சுற்றி அமைந்துள்ள பகுதியினை சுற்றிலும் அழகு படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளும் ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான  டேவிதார் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையினை தமிழக அரசுக்கு வழங்க உள்ளார்.

அதன் பின்னர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Smart City) நடைபெற்ற பணிகள் குறித்து ஒரு நபர் விசாரணைக் குழு ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான  டேவிதார் தலைமையில் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் என்.எஸ்.நாராயணன், மாநகர நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News