பாளை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது

கடந்த 17ஆம் தேதி பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் இரவு வெடி மருந்தை வெடிக்கச் செய்த நபர் கைது.

Update: 2022-04-19 02:21 GMT

பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் வெடி மருந்தை வெடிக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் உத்திரவின் பேரில், கிழக்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் மற்றும் மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் K.சுரேஷ்குமார் மேற்பார்வையில் சட்டத்திற்கு விரோதமான வெடிமருந்தை வெடிக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

கடந்த 17.04.2022 அன்று சுமார் இரவு 10.00 மணியளவில் ரெட்டியார்பட்டி ரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்த கொம்பையா (எ) கணேசன் என்பவர் மகன் ராம்குமார்(24) என்பவர் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தினுள் டீக்கடைக்கு வெளியே அவருடைய செல்போனை சார்ஜ் செய்துவிட்டு ஊருக்கு செல்ல வெளியே சென்றபோது மிகபெரிய சத்தம் கேட்டுள்ளது.

இதுகுறித்து ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண். 273/2022 u/s 3(A), 3(b) Explosive Substance Act 1908 & 3 of TNPPDL Act வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்ததில், சுடலை (25), வேதகோவில் தெரு, மணக்கரையை சேர்ந்தவர் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள சீனி கபே என்ற டீக்கடையில் வேலைப்பார்த்து வருவதாகவும், இவர் வெடி மருந்துகளால் ஆன பேப்பர் பொட்டலம் ஒன்றை சுவரில் எறிந்து வெடிக்கச் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:    

Similar News