நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக புகைப்பட தின சிறப்பு கண்காட்சி
புகைப்பட கலைஞர்களின் சிறந்த புகைப்படங்கள், ஓவிய மாணவியின் 75 சாதனை பெண்மணியின் ஓவிய படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது
அரசு அருங்காட்சியகம் மற்றும் நெல்லை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷன் இணைந்து நடத்தும் உலக புகைப்பட தின விழா மற்றும் புகைப்பட கண்காட்சிகள் துவக்க விழா நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை அருங்காட்சியக காப்பாளர் சிவ.சத்திய வள்ளி துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் முதல் முதலாக பயன்படுத்தப்பட்ட புகைப்பட கருவி முதல் தற்போது உள்ள டிஜிட்டல் புகைப்பட கருவிகள் வரை காட்சி படுத்தப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர்களின் திறமையான பல்வேறு வித்தியாசமான புகைப்படங்களான அழகான சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள்,இயற்கை சார்ந்த படங்கள், கோவில்கள், நீர்வாழ் பறவைகள், விலங்குகள் என நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இக்கண்காட்சி இன்று முதல் 20.08.21 வரை பொதுமக்கள் வந்து கண்டு கண்டுகளிக்கலாம். இக்கண்காட்சியில் நெல்லை மாவட்ட வீடியோ போட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜூபிலி ராஜா, செயலரளர் பெய்லி ஆல்ட்ரின், பொருளாளர் ஸ்டீபன் தாமஸ், நிர்வாகிகள் பொன்ராஜ், மாரியப்பன், தேவதாஸ் பாண்டியன், அருண், பிரின்ஸ் பிரபாகர், ஜோகலா , சுதந்திர லக்ஷ்மி, மேனாள் லயன்ஸ் கிளப் ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ அரபிந்தோ டிரஸ்ட் பாளையங்கோட்டை சார்பில் அரவிந்தரின் அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
மேலும் சிவராம் கலைக்கூடம் மாணவி மதனா 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 சாதனை பெண்மணிகளின் ஓவியங்களை பெண்கள் தினமும் பயன்படுத்தும் காபித்தூள் கொண்டு வரைந்த ஓவிய படங்கள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரிய கண்காட்சிகளை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வந்து பார்வையிடலாம் என்று நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்தார்.