நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக புகைப்பட தின கண்காட்சி
அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் சார்பில் உலக புகைப்பட தின கண்காட்சி.;
அரசு அருங்காட்சியகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் உலகப் புகைப்பட தின விழா நடைபெற்றது.
உலகப் புகைப்பட தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் திருநெல்வேலி வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் லயணல்ராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
பின்னர் புகைப்படப் கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் லயணல் ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் சங்க தலைவர் ராஜா, செயலாளர் பெய்லி ஆல்ட்ரின், பொருளாளர் வின்சென்ட் ஸ்டீபன் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.