வாக்காளர் விழிப்புணர்வு பயிலரங்கம்

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில், வாக்காளர் வாக்கு அளிப்பது குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

Update: 2021-03-09 17:45 GMT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிவுறுத்தலின்படி வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு பாளையங்கோட்டை சாரதா கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை கல்லூரி யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா தொடங்கி வைத்தார். பயிலரங்கிற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்). சாந்தி தலைமை தாங்கினார். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் பேரா. மில்கா விஜயன் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர். மலர்விழி தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர். (தேர்தல்) சாந்தி 100%வாக்களிப்பது குறித்தும் மாணவிகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் பரிசு பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கியும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்ரமணியன், வாக்காளர் கடமை, உரிமை பற்றி சிறப்புரையாற்றியும், வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரி பார்க்கக் கூடிய காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார். மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்வில், நல்நூலகர் முத்துகிருஷ்ணன் வாக்காளர் உறுதி மொழியை வாசிக்க, கல்லூரி மாணவ மாணவியர் பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பறக்கும் படை, வட்டாட்சியர் ராஜூ, வருவாய் ஆய்வாளர் அருணாசலம், ரெஜினாமேரி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பெட்காட் மாநகரச் செயலாளர்.சு.முத்துசுவாமி நன்றி கூறினார்.

நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, நான்குநேரி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags:    

Similar News