நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது
நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை தொடங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விற்னையை தொடங்கினர்.
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர் அருகிலுள்ள உழவர் சந்தையில் சுமார் 120 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட தோட்டக்கலைத்துறை பரிந்துரையின்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 24. 5 .2021 அன்று கொரோனா தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி மகாராஜாநகர் ரயில்வே கேட் அருகே உள்ள திறந்தவெளி பூங்காக்களில் செயல்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் வேளாண் வணிகம் முருகானந்தம் அறிவுறுத்தலின்படி,மூன்று மாதங்களுக்கு பின்பு இன்று முதல் உழவர் சந்தையினுள் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு, முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டு வருகிறது.
உழவர் சந்தையினுள் காய்கறிகள் விற்பதற்கு மீண்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததற்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உழவர் சந்தையின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.