நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிமுக சார்பில் விருப்ப மனு
அதிமுக சார்பில் போட்டியிட பாளை மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள் விருப்ப மனுவை மாவட்ட செயலாளர் கணேசராஜாவிடம் வழங்கினார்.;
திருநெல்வேலி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விருப்ப மனுக்களை திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக செயலாளர் தச்சை என் கணேசராஜாவிடம் விருப்ப மனுக்களை கொடுத்தனர். அப்போது அவர் மனுக்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இதில் கழக அமைப்புச் செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன் EX.MLA, சுதா கே. பரமசிவன், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணிச் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.