ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய காவல்துறை.

நெல்லையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்சில் கொடுத்து ஊக்குவித்த போக்குவரத்து காவல்துறையினர்.

Update: 2022-04-20 16:39 GMT

நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்சில் கொடுத்து ஊக்குவித்த போக்குவரத்து காவல்துறையினர், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அதே இடத்தில் அபராதமும் விதித்தனர்.

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ்குமார் உத்தரவின்படி, மாநகர பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான முயற்சிகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு வழியாக இன்று நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணிந்ததற்காக அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பென்சில்கள் வழங்கி பாராட்டினர்.

அதேவேளை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதே இடத்தில் அபராதம் விதித்தும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை மிகவும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. பென்சில் வாங்கிய வாகன ஓட்டிகள் மிக மிக மகிழ்ச்சியுடன் நன்றி கூறி சென்றனர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர். போக்குவரத்து காவல் அதிகாரிகள்.

கோடை வெயிலை பொருட்படுத்தாமல் பணியாற்றும் போக்குவரத்து துறை காவலர்களுக்கு, போக்குவரத்து துறை ஆய்வாளர் இளநீர் வாங்கிக் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News