அரசு அருங்காட்சியகம்-பயனற்ற பொருட்களில் இருந்து கலைபொருட்கள் செய்யும் பயிற்சி.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பயனற்ற பொருட்களில் இருந்து கலை பொருள் தயாரிக்கும் இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-05-27 14:57 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து இணையவழி கைவினைப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவின்படி அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தே பயன்தரும் வகையில் அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணைய வழியில் பல்வேறு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடைபெற்ற பயிற்சியில் வீணான பொருள்களில் இருந்து கலைப் பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்டக் காப்பாட்சியர் சத்தியவள்ளி துவங்கி வைத்தார்.சிவராம் கலைக்கூடத்தின் ஓவியப்பயிற்சி ஆசிரியர் கோவிந்தராஜ் நடத்தினார்.

அதில் பழைய அட்டை மற்றும் A4 பேப்பர் கொண்டு அழகிய போட்டோ பிரேம் தயாரித்தல் மற்றும் காய்கறி கழிவுகள் கொண்டு அதை அலங்கரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags:    

Similar News