நெல்லையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஸ்டேஸ்னரி கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை கடை உரிமையாளர் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஸ்டேஸ்னரி கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை கடை உரிமையாளர் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை கேட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கேடிசி நகர் 7-வது தெருவில் ஸ்டேஸ்னரி கடை நடத்தி வருகிறார் .
இவரது கடைக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன் ஒருநபர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து செல்போனுக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து சென்றுள்ளார. இந்நிலையில் வங்கியிலல் பணம் செலுத்துவதற்காக ஆறுமுகம் சென்ற போது வங்கியில் அவர் கொடுத்த அந்த 500 ரூபாய் கள்ள நோட்டு என்று கூறி வாங்க மறுத்துவிட்டர் .
மேலும் அவர்கள் அந்த நோட்டில் அடையாளமிட்டு, அந்த பணத்தில் உள்ள எண்ணையும் குறித்து கொடுத்து இதுபோன்ற எண்ணில் யாரும் பணம் கொடுத்தால் அது கள்ள நோட்டு என்று தெரிவித்துள்ளனர்
அந்த பணத்தையும் கையில் கொடுத்துள்ளனர் . இதனையடுத்து அவர் தினமும் தனது கடைக்கு வரும் 500 ரூபாய் நோட்டுக்களை பரிசோதித்தே வாங்கி வந்தார் . இந்நிலையில் நேற்று மாலை ஒரு இளைஞர் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து செல்போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .
அவர் அந்த நோட்டை வாங்கி பார்த்த போது அது போலியான எண்கொண்ட கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து கடையில் உட்கார வைத்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர் பெயர் ஆரிப்கான் , திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் , அவர் டிரம்செட் அடிக்கும் கலைஞர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் , இந்த பணத்தை கொடுத்தது யார் , அல்லது கள்ள நோட்டு கும்பல் இங்கு முகாமிட்டுள்ளதா, முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .