நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்கள் சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது;
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் 491 வாக்குச்சாவடியில் அம்பாசமுத்திரம் நகராட்சி உள்ள 21 வார்டுகளுக்கு 42 வாக்குச்சாவடிகளிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் 51 வாக்குச்சாவடிகளிலும், களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளிலும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகளில் ஆக மொத்தம் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, சங்கர் நகர் மற்றும் நாரணம்மாள்புரம் பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதியில் உள்ள வாக்குப் பெட்டிகள் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதுமே வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.