தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு, நீரேற்று நிலையத்தை நெல்லை மேயர் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறு மற்றும் நீரேற்றும் நிலையங்களில் நெல்லை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிளும் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க வேண்டும். என்பதற்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீரை உறைகிணறுகள் மூலம் நீரேற்று நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு வழங்கப்படும் இடங்களான தீப்பாச்சி அம்மன் தலைமை நீரேற்று நிலையம், மனப்படைவீடு தலைமை நீரேற்று நிலையம், திருமலைகொழுந்து புரம் நீரேற்று நிலையங்களை நேரில் சென்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர்ஜஹாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் அருள், இளநிலை பொறியாளர் தன்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.