பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு சிறப்புபடை காவல் பிரிவு 217 ஆண் காவலர்ளுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்தார்

Update: 2022-03-14 16:00 GMT

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினார்.

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு சிறப்புபடை காவல் பிரிவு 217 ஆண் காவலர்ளுக்கான பயிற்சியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பயிற்சி பள்ளி முதல்வர் சரவணன்  துவக்கி வைத்து பேசியதாவது:

புதிதாக காவல் துறையில் பணியாற்ற காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, காவல்துறையில் அனைவரும் முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம். பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முதன்மை கவாத்து போதகர் மற்றும் முதன்மை சட்ட போதகர் கற்றுக்கொடுக்கும் பாடங்களை நன்கு கவனித்து செயல்பட வேண்டும் எனவும் பணியில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.  உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நினைவூட்டு கவாத்து பயிற்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு நினைவு பரிசை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் சுப்பிரமணியன், முதன்மை கவாத்து போதகர் சுனைமுருகன், முதன்மை சட்ட போதகர் சாந்தி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News