நெல்லை கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப கண்காட்சி

வண்ணாரப்பேட்டை எஃப் எக்ஸ் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-09-19 14:09 GMT

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப கண்காட்சி போட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்றார்.

நெல்லை வண்ணார்ப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்காக மாநில அளவிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன. அதில் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி, தொழில்நுட்ப போட்டி, அறிவியல் படைப்பாற்றல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ, ரோஸ்மேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

போட்டி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது அறிவாற்றல் படைப்புகளை செய்து காட்டினர். இதனை ஆய்வு செய்த பேராசிரியர் குழுவினர் சிறந்த படைப்பாற்றலை தேர்வு செய்தனர். எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் இயந்திர மாதிரி மற்றும் தொழில் நுணுக்கங்களுடன் செய்யப்பட்டிருந்த ஏராளமான வியத்தகு படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. இதனை ஏராளமான மாணவர்கள் கண்டு வியந்தனர்.

இந்த கண்டுபிடிப்பு கண்காட்சியை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ்பாபு, ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் A.தர்ஷிணி அருண்பாபு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பள்ளி மாணவ, மாணவியர் தங்களது தொழில்நுட்ப படைப்புக்களை செய்து காட்டினார். அவர்களின் செயல் திறனை நிறுவனர் கிளிட்டஸ்பாபு வெகுவாக பாராட்டினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில், ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் A.தர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் முனைவர் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் V.வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞானசரவணன், பயிற்சித்துறை டீன் பாலாஜி. வளாக மேலாளர் J.சகாரியா காபிரியல், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News